உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  350 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

 350 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

போத்தனூர்: மாநகர போலீஸ் கமிஷனரின் தனிப்படையினர், குனியமுத்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருவர் இருந்தனர். புகையிலை பொருட்கள் இருந்தன. விசாரணையில், ராஜஸ்தான் மாநிலம், ஜாலூரை சேர்ந்த மதன்சிங், 40, ராம்சிங், 35 என்பதும், பெங்களூருவிலிருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்து, இரு ஆண்டுகளாக விற்பனை செய்வதும் தெரிந்தது. காரில், 350 கிலோ புகையிலை பொருட்களுடன், இருவரும் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி