கோவில் உண்டியலில் 36 கிராம் தங்கம், 366 கிராம் வெள்ளி
கோவை : சுக்ரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முருகன் சன்னதி, விநாயகர், நவக்கிரஹம், உற்சவர் சன்னதி உள்ளன. மொத்தம் ஐந்து உண்டியல்கள் உள்ளன. அன்னதான உண்டியல் தனியாக உள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள ஐந்து உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.இந்து சமய அறநிலையத்துறை ஆய்வர் ராம்குமார், கோவில் செயல் அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறப்பு நடந்தது. கோவில் பணியாளர்கள், விஸ்வேஸ்வரா பள்ளி மாணவர்கள், கோவில் பக்தர்கள் உள்ளிட்டோர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 36 கிராம் தங்கம், 366 கிராம் கிராம் வெள்ளி, எட்டு லட்சம் ரொக்கத்தை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தியிருந்தனர்.