உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தைப்பூசத்தை முன்னிட்டு பழநிக்கு 40 சிறப்பு பஸ்கள்

தைப்பூசத்தை முன்னிட்டு பழநிக்கு 40 சிறப்பு பஸ்கள்

பொள்ளாச்சி; தைப்பூசத்தை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பொள்ளாச்சி வழியே 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.தை மாதம் வரும் பூச நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்ததாகும். இதற்காக பழநி மலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டமாக சென்று, வழிபாடு நடத்துவர். பொள்ளாச்சி பகுதியில் இருந்து, பழநிக்கு முருக பக்தர்கள் பாத யாத்திரையாகவும், பஸ்களிலும் செல்வர். இதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.வரும், 11ம் தேதி தைப்பூசம் என்பதால், இன்று 8ம் தேதி முதல், பொள்ளாச்சி மார்க்கமாக, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக, 25 பஸ்கள், பொள்ளாச்சியில் இருந்து, 15 பஸ்கள் என, பழநிக்கு 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'இந்தாண்டு தைப்பூசம் செவ்வாய் கிழமை வருகிறது. கூட்டம் மிக அதிகமாக இருந்தால், அதற்கேற்ப கூடுதலாகவும் பஸ்கள் இயக்கப்படும். குறிப்பாக, பக்தர்கள் நலன் கருதி, இன்று 8ம் தேதி முதல் வரும், 12ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி