மேலும் செய்திகள்
ஜூலை 17ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு
27-May-2026
சூலுார்: சூலுார் தாலுகாவில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிக்கு, 449 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் எட்டாவது தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி இரு கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டமாக வீடுகளை கணக்கெடுக்கும் பணி, ஆக., 1 முதல், ஆக., 30 ம்தேதி வரை நடக்கிறது. இரண்டாவது கட்டமாக, மக்களை நேரடியாக சந்தித்து, 33 விதமான கேள்விகளை கேட்டு பதில் பெறப்பட்டு, பதிவு செய்யும் பணி, செ., 1 முதல், செப்., 18 ம்தேதி வரை நடக்க உள்ளது. இப்பணிக்காக, சூலுார் தாலுகாவில், 449 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் ஆவர். இப்பணியை மேற்பார்வை செய்ய, தலைமையாசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், என, மொத்தம், 75 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு, கணக்கெடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட உள்ளதாக, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
27-May-2026