உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 489 கிலோ கேக் கவர் பறிமுதல்

489 கிலோ கேக் கவர் பறிமுதல்

கோவை: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று (நவ.,13) கேக் வழங்கப்பட்டது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 148 பள்ளிகளில் கேக் வழங்கினர். கேக் கவர்களை பள்ளி வளாகங்களில் வீசுவதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. தூய்மை பணியாளர்கள் மூலம் கவர்கள் சேகரிக்கப்பட்டன. மேற்கு மண்டலத்தில் 96.8 கிலோ, கிழக்கு மண்டலத்தில் 98.1 கிலோ, வடக்கு மண்டலத்தில் 98.4 கிலோ, தெற்கு மண்டலத்தில் 98.4 கிலோ, மத்திய மண்டலத்தில் 97.8 கிலோ என மொத்தம் 489.5 கிலோ கேக் கவர்கள் கிடைத்தன. இவற்றை மறுசுழற்சிக்கு ஒப்படைக்கவுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !