4வது டிவிஷன் கிரிக்கெட் போட்டி
கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சி.டி.சி.ஏ.,) சார்பில், நான்காவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி, பி.எஸ்.ஜி. - ஐ.எம்.எஸ். - எஸ்.ஆர்.ஐ.ஐ. உள்ளிட்ட மைதானங்களில் நடந்து வருகி றது. எக்கர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், சாம் கிரிக்கெட் அகாடமி அணியும் மோதின. எக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர், 16.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 37 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் ராபின் பாக்கிய ராஜா ஆறு விக்கெட் வீழ்த்தினார். சாம் கிரிக்கெட் அகாடமி அணியினர், 7.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு, 38 ரன் எடுத்து வெற்றி பெற்றனர்.