உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 500 டன் வெங்காயம் தேக்கம்: கவலையில் விவசாயிகள் கண்ணீர்

500 டன் வெங்காயம் தேக்கம்: கவலையில் விவசாயிகள் கண்ணீர்

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், கடந்த மார்ச் மாதத்தில் அறுவடை செய்யப்பட்ட, சுமார் 500 டன் சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய முடியாமல், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.கடந்த ஜனவரி மாதத்தில், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் சுமார், 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் நடவு செய்யப்பட்டது. இதனை, மார்ச் மாதத்தில், அறுவடை செய்தனர். இந்நிலையில், வெங்காயங்களுக்கு உரிய விலை கிடைக்காததால், அறுவடை செய்த வெங்காயங்களை பட்டறையில் அடைத்து வைத்திருக்கின்றனர்.இங்கு வெங்காயம் வாங்க வரும் மொத்த வியாபாரிகள், அடிமட்ட விலைக்கே கேட்டு வருகின்றனர். தற்போது, பருவமழைக்காக மீண்டும் சின்ன வெங்காயம் நடவு செய்யும் பணி நடந்து வருகிறது. முன்பு அறுவடை செய்த சின்ன வெங்காயமே, இன்னும் விற்பனை செய்யமுடியாமல் இருப்பதால், என்ன செய்வது என்று தெரியாமல், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை