மேலும் செய்திகள்
குட்கா பறிமுதல்
16-Oct-2024
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 52 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.பெரியநாயக்கன்பாளையம் எஸ்.ஐ., மகாராஜா ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபரை பிடித்து விசாரணை நடத்தினார். இதில், அவர் துடியலூர், வெள்ளக்கிணறு, நேதாஜி வீதியைச் சேர்ந்த திருவேங்கடம், 57, என தெரிய வந்தது. அவரிடமிருந்து, 52 கிலோ எடையுள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் டாடா ஏஸ் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட திருவேங்கடம் சிறையில் அடைக்கப்பட்டார்.
16-Oct-2024