உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சிகளில் 600 பேர் தற்செயல் விடுப்பு

ஊராட்சிகளில் 600 பேர் தற்செயல் விடுப்பு

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 600 பேர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தூய்மை காவலர்களின் மாத சம்பளத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி ஊராட்சி வாயிலாக சம்பளம் வழங்க வேண்டும். மக்கள் நல பணியாளர்களுக்கு காலமுறை சம்பளம் நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குவோருக்கு ரூ. 15 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் பென்ஷன் திட்டத்தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் மோட்டார் ஆப்பரேட்டர்கள், 100 நாள் வேலை திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என ஊராட்சிகளில் பல்வேறு பணிகளில் பணிபுரியும் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை