68வது வருடாந்திர மக்காச்சோள பயிலரங்கு
கோவை; கோவை, வேளாண் பல்கலையில், 68வது வருடாந்திர மக்காச்சோள பயிலரங்கு இன்று துவங்குகிறது.இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், ஆண்டுதோறும் மக்காச்சோள வருடாந்திர பயிலரங்கு நடத்தப்படுகிறது. 67வது வருடாந்திர பயிலரங்கு, கடந்த ஆண்டு, ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா வேளாண் பல்கலையில் நடந்தது.68வது பயிலரங்கு, கோவை வேளாண் பல்கலையில் இன்று துவங்குகிறது.லூதியானாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக, இந்திய சிறுதானியங்கள் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் ஜாட், திட்ட ஆலோசனை மற்றும் கண்காணிப்புக் குழு தலைவர் செய்ன் தாஸ், கூடுதல் ஐ.சி.ஏ.ஆர்., கூடுதல் தலைமை இயக்குநர் பிரதான், தமிழ்நாடு வேளாண் பல்கலை துணை வேந்தர் (பொ) தமிழ்வேந்தன் உட்பட நாடு முழுதும் இருந்து விஞ்ஞானிகள் பங்கேற்கின்றனர்.இப்பயிலரங்கில், மக்காச்சோளம் தொடர்பான ஆய்வுகள், எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.பயிலரங்கு நாளை நிறைவடைகிறது.