உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு ஓ.ஏ., பணியிடத்துக்கு 800 பேருக்கு நேர்காணல்

ஒரு ஓ.ஏ., பணியிடத்துக்கு 800 பேருக்கு நேர்காணல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரே ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு, இரு தினங்கள் நடந்த நேர்காணலில் 800 பேர் பங்கேற்றனர். பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவல உதவியாளர் பணியிடத்தை நிரப்ப, கடந்த சில வாரங்களுக்கு முன் இணையதளத்தில், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பி.இ., எம்.பி.ஏ., படித்த இளநிலை, மேல்நிலை பட்டதாரிகள் உள்ளிட்ட, 800 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். கடந்த இரு நாட்களாக பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது. ஒரே ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு, 800 பேர் விண்ணப்பம் செய்திருந்ததால், இரு தினங்களாக, தலா, 400 பேர் வீதம் காலை முதல் மாலை வரை நேர்காணல் நடத்தப்பட்டது. பி.டி.ஓ.,க்கள் சதீஷ்குமார், சுபா உள்ளிட்டோர் நேர்காணலை நடத்தினர். நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட கலெக்டர் வாயிலாக முடிவு தெரிவிக்கப்படும் என, ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !