உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டாஸ்மாக் மதுக்கடையில் அதிரடி சோதனை 883 பாட்டில்கள் பறிமுதல்; ஆறு பேருக்கு சிறை

டாஸ்மாக் மதுக்கடையில் அதிரடி சோதனை 883 பாட்டில்கள் பறிமுதல்; ஆறு பேருக்கு சிறை

கோவை, ;மாநகர பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்பட்ட பார்களில் போலீசார் நடத்திய சோதனையில், 883 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கோவை மாநகர பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது பார்கள் மற்றும் பிற பார்களில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்த, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இரவு நேரங்களில் மது விற்பனை செய்யப்படும் பார்களை கண்காணித்து வந்தனர்.இந்நிலையில், கடந்த 23ம் தேதி மாநகர துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் உள்ளிட்ட போலீசார் மாநகரில் உள்ள, பல்வேறு டாஸ்மாக் பார்களில், சோதனை மேற்கொண்டனர். அப்போது காந்திபுரம், காளிங்கராயன் வீதியில் உள்ள பாரில் 383 பாட்டில்கள், ரூ. 5900 பணம், செட்டி வீதியில் உள்ள பாரில், 91 பாட்டில்கள், செல்வபுரத்தில் உள்ள பாரில் 302 பாட்டில்கள், குனியமுத்துாரில் உள்ள பாரில் இருந்து 68 பாட்டில்கள், ரூ. 15,830 பணம், போத்தனுார், சாரதா மில் ரோட்டில் உள்ள பாரில் 41 பாட்டில்கள், ரூ.6800 பணம் என மொத்தம், 883 பாட்டில்கள் மற்றும் ரூ.36,030 பணம் மொபைல் ஆகியவை பறிமுதல் செய்தனர்.சட்ட விரோதமாக மது விற்பனை செய்த, சிவகங்கையை சேர்ந்த கனகராஜ், 39, ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜ்குமார், 55, ஜெயச்சந்திரன், 29, தஞ்சாவூரை சேர்ந்த சிவவேல், 29, புதுக்கோட்டையை சேர்ந்த ரகுபதி, 31, பாரதி, 29 ஆகிய ஆறு பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், மூவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ