மேலும் செய்திகள்
குழந்தைகள் கல்வி கற்க அங்கன்வாடிக்கு அனுப்புங்க
09-Jun-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்களில் உள்ள, 205 அங்கன்வாடி மையங்களில் 986 குழந்தைகள் புதிதாக சேர்ந்துள்ளனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் வாயிலாக, 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் முழு வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், பொள்ளாச்சி தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியங்களில், 205 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இங்கு, சத்துமாவு, ஊட்டசத்தோடு கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவ கல்வி வழங்கப்படுகிறது. குறிப்பாக, 2 வயது முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, முறைசாரா முன்பருவ கல்வி, செய்கை பாடல், கதை, விளையாட்டு கல்வி உபகரணங்கள் வாயிலாக அளிக்கப்படுகிறது. மேலும், குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளி செல்ல ஆயத்தம் செய்யப்படுகின்றனர். அவ்வகையில், அந்தந்த பகுதி, அங்கன்வாடி பணியாளர்கள், வீடுகள்தோறும் சென்று குழந்தைகள் சேர்க்கை பணியை மேற்கொண்டு வந்தனர்.இது குறித்து குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா கூறுகையில், ''பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள, 106 அங்கன்வாடி மையங்களில், 503 குழந்தைகளும்; தெற்கு ஒன்றித்தில் உள்ள, 99 அங்கன்வாடி மையங்களில், 483 குழந்தைகள் என, மொத்தம், 986 குழந்தைகள் புதிதாக சேர்ந்துள்ளனர்,'' என்றார்.
09-Jun-2025