உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிரச்னைக்கு தீர்வு காண ஆழ்துளை கிணறு

பிரச்னைக்கு தீர்வு காண ஆழ்துளை கிணறு

சூலுார்: அப்பநாயக்கன்பட்டியில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண, புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது. சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உப்டட் அப்பநாயக்கன்பட்டியில், தண்ணீர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. நல்ல தண்ணீர் ஒரு மாதத்துக்கு ஒரு முறையும், ஆழ்துளை கிணற்று நீர், 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வினியோகிப்பதால், மக்கள் அவதிக்குள்ளாகினர். குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்கட்டமாக, ஆழ்துளை கிணற்று நீர் வினியோகம் அதிகரிக்க, இன்ஜின் தோட்டம் பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நேற்று துவங்கியது. த.வெ.க., எம்.எல்.ஏ., சுகுமார், பணிகளை துவக்கி வைத்தார். இது பயன்பாட்டுக்கு வந்தால், வினியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும் என, மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை