உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுமுகைக்கு வந்து பட்டு வாங்கி சென்ற கவுடிலுாப்பி தீவை சேர்ந்த குடும்பத்தினர்

சிறுமுகைக்கு வந்து பட்டு வாங்கி சென்ற கவுடிலுாப்பி தீவை சேர்ந்த குடும்பத்தினர்

மேட்டுப்பாளையம்: பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள தீவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சிறுமுகைக்கு வந்து பட்டு வாங்கி சென்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை, ஆலாங்கொம்பு, பகத்தூர், திம்மராயம்பாளையம், சென்னம்பாளையம், வெள்ளிக்குப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைத்தறி நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வரு கின்றனர். சிறுமுகையில் உள்ள நெசவாளர்களால் கைத்தறிகளில் நெசவு செய்யப்படும் பட்டு, மென்பட்டு, காட்டன், கோரா காட்டன் உள்ளிட்ட பல்வேறு கைத்தறி ரகங்களுக்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. இந்தியா முழுவதும் சிறுமுகை மென்பட்டுகளுக்கு மவுசு உள்ளது. மென்பட்டுகள் மிகவும் எடை குறைவு என்பதால் பெண்களின் விருப்ப தேர்வில் மென்பட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. அண்மை காலமாக சிறுமுகையை நோக்கி சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமுகைக்கு பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள கவுடிலூப்பி என்னும் தீவில் உள்ள செயின்ட் அன்னி நகரில் இருந்து வந்திருந்த ஒரு குடும்பத்தினர் மென்பட்டு, கைத்தறி பட்டு புடவைகள், கைத்தறி ஆடைகளை வாங்கி சென்றனர். சிறுமுகையில் உள்ள காரப்பன் கடை உரிமையாளர் தண்டபாணி கூறுகையில், ''கூகுள் வாயிலாக தேடி சிறுமுகைக்கு சிங்கப்பூர், ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் இங்கு வருகின்றனர். அதே போல் சின்னத்திரை, சினிமா பிரபலங்களும் தீபாவளிக்கு ஆடை வாங்க சிறுமுகைக்கு தேடி வருகின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை