செஸ் போட்டியில் ஹாட்ரிக் வெற்றி; ஈஸ்வர் கல்லுாரி அணி அசத்தல்
கோவை : அண்ணா பல்கலை பத்தாவது மண்டல செஸ் போட்டியில் ஸ்ரீஈஸ்வர் கல்லுாரி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதுஅண்ணா பல்கலை பத்தாவது மண்டல செஸ் போட்டியானது பொள்ளாச்சி பி .ஏ., பொறியியல் கல்லுாரியில் நடைபெற்றது ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 18 அணிகள் பங்கு பெற்றன ஐந்து சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் அனைத்திலும் கிணத்துக்கடவு ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் வெற்றி பெற்றனர். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக செஸ் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றனர்.மகளிர் பிரிவில் ஈஸ்வர் கல்லுாரி அணி மூன்றாம் இடம் பிடித்தது .வெற்றி பெற்றவர்களை கல்லுாரி தலைவர் மோகன்ராம், இயக்குனர் ராஜாராம், முதல்வர் சுதா மோகன் ராம் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.