உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அமெரிக்காவிலிருந்து வந்த நபர் திடீர் மரணம்

அமெரிக்காவிலிருந்து வந்த நபர் திடீர் மரணம்

கோவை, : கோவை, செட்டிபாளையம் பிரிவு, நல்லாசிரியர் தெருவை சேர்ந்தவர் சங்கர், 56. இந்தியா மற்றும் அமெரிக்காவில், சாப்ட்வேர் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கோவை, கோல்டு வின்ஸ் மற்றும், அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் அலுவலகங்கள் உள்ளன.அமெரிக்காவில் மனைவி ராணி ராமசாமி, 51 மற்றும் மகன்கள் உடன் வசித்து வந்தார். கடந்த 24ம் தேதி சங்கர் அமெரிக்காவிலிருந்து கோவைக்கு வந்தார். கடந்த, 27ம் தேதி மாலை, அலுவலகத்தில் பணியில் இருந்த போது, தனக்கு உடல் நல குறைபாடு ஏற்பட்டுள்ளதாக கூறினார். போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதால், அலுவலக ஊழியர்கள் அவரை பைக்கில் ஏற்றி, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.கோவை வந்த மனைவி ராணி ராமசாமி, பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை