மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு 'ஸ்கூல்பேக்' வழங்கல்
26-Sep-2024
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, அரசு பள்ளியில் காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர், ஒரு நாள் பள்ளி தலைமையாசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.பொள்ளாச்சி அருகே, மாக்கினாம்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை, 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், கடந்தாண்டு முதல் காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர், ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியராகவும், இரண்டாவது மதிப்பெண் பெறும் மாணவர் உதவி தலைமையாசிரியராக பொறுப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.நடப்பாண்டு தேர்வில் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி கமஸ்ரீ, (490 மதிப்பெண்) இரண்டாவது மதிப்பெண் கலைச்சரன் (393 மதிப்பெண்) ஆகியோர் தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் என பொறுப்பேற்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.மாணவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அவர்களை, பள்ளி தலைமையாசிரியர் இருக்கையில் அமர வைத்து பொறுப்புகளை வழங்கினார். ஊராட்சி தலைவர் மாரியம்மாள், துணை தலைவர் அழகிரிராஜ் ஆகியோர் மாணவர்களுக்கு கேடயம் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் தமிழரசி மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.ஓய்வு பெற்ற கல்லுாரி முதல்வர் லதா, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும், முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்குவதாக உறுதியளித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் கூறுகையில், ''நடப்பாண்டு மாநில அளவில் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என ஊக்கம் அளித்து கற்பிக்கப்படுகிறது. மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு நாள் பள்ளி தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் பொறுப்பு வழங்கப்பட்டது. இது மற்ற மாணவர்களிடம் படிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தும்,'' என்றார்.
26-Sep-2024