குப்பை கிடங்கில் பற்றியது திடீர் தீ
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில், மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் நேற்று மாலை திடீரென தீ பற்றியது. அருகில் உள்ளவர்கள் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் தீ பரவியது. தீயணைப்புப் துறையினர் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தால் ஏற்பட்ட புகை காரணமாக அருகில் உள்ள வீடுகள், கடைகளில் உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஆகிய உடல் உபாதைகள் ஏற்பட்டன. யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.