உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிச்சைக்காரர் அடித்து கொலை தலைமறைவு நபருக்கு வலை

பிச்சைக்காரர் அடித்து கொலை தலைமறைவு நபருக்கு வலை

கோவை: கோவையில், பிச்சைக்காரரை அடித்துக்கொன்று, தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை, ஆர்.எஸ்.புரம்., காமராஜர்புரத்தில், சீனிவாசன், 60, என்பவர், சில ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்தார். இரவில் அதே பகுதியில் தெருவோரங்களில் துாங்குவது வழக்கம். நேற்று காலை, சீனிவாசன் தலையில் ரத்தக்காயத்துடன் சடலமாக கிடந்தார். சடலத்தை கைப்பற்றிய போலீசார், அப்பகுதி 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், அதே பகுதியில் பிச்சை எடுக்கும் மதுரையைச் சேர்ந்த வேல்முருகன், 50, என்பவர், சீனிவாசனை கட்டையால் தாக்கி, கொலை செய்தது தெரிந்தது. போலீசார் கூறுகையில், 'சீனிவாசனும், வேல்முருகனும் ஒரே பகுதியில் பிச்சை எடுத்து வந்ததில், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு முன், இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், வேல்முருகனை வேறு இடத்துக்கு செல்ல, அப்பகுதி மக்கள் கூறியதாக தெரிகிறது. 'இதில் ஆத்திரமடைந்த வேல்முருகன், நேற்றிரவு, துாங்கிக் கொண்டிருந்த சீனிவாசனை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். அவரை தேடி வருகிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ