உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டீ துாள் லோடு லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து

டீ துாள் லோடு லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து

வால்பாறை:கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி அருகே, அதிரப்பள்ளி - வால்பாறை ரோட்டில், சுற்றுலா வாகனப் போக்குவரத்து அதிகம். இந்நிலையில், மளுக்கப்பாறை தேயிலை தொழிற்சாலையில் இருந்து, 10 டன் டீ துாள் லோடு ஏற்றிய லாரி, சாலக்குடி வழியாக கொச்சியின் ஏல மையத்துக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது.பத்தடிபாலம் அருகே சென்ற போது, எதிர்பாராத விதமாக லாரி ரோட்டில் கவிழ்ந்தது. நேற்று காலை, விபத்துக்குள்ளான லாரியில் இருந்த டீ துாள் பார்சல், வேறு லாரிக்கு மாற்றப்பட்டது. அதன்பின், கிரேன் உதவியுடன் லாரி மீட்கப்பட்டது.இதனால், வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில், 11 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருமாநில சுற்றுலா பயணியரும், கேரள அரசு பஸ்ஸில், சாலக்குடியிலிருந்து மளுக்கப்பாறை வந்த பயணியரும் திரும்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. விபத்து குறித்து வால்பாறையைச் சேர்ந்த லாரி டிரைவர் முரளியிடம், அதிரப்பள்ளி போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி