உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  எதற்கும் உதவாத ஹெல்ப் லைன்!

 எதற்கும் உதவாத ஹெல்ப் லைன்!

தம்பிக்கு கல்யாணம். அதுவும் சென்னையில். செலவு எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை என்று பிரீமியம் தட்கலில், ரயில் டிக்கெட் புக் பண்ணி விட்டேன். வட கோவை ஸ்டேஷன்ல போர்டிங் பாய்ன்ட் போட்டுட்டு, கவுண்டம்பாளையத்திலிருந்து கிளம்பினேன். வடகோவைல அப்படி ஒரு டிராபிக். ரயில் மிஸ் ஆயிடுமோன்னு பயந்து, உடனே டிராபிக் ஹெல்ப் லைனுக்கு கால் பண்ணுனேன். ரிங் போகுது… போகுது… யாரும் எடுக்கவே இல்லை. எப்படியோ அந்த டிராபிக்கிலிருந்து தப்பிச்சு, டிரைன பிடிச்சுட்டேன். டிரைன்ல உட்காந்ததும் தான் மூச்சு வந்துச்சு. எதிர்த்த சீட்ல உக்காந்திருந்த பெரியம்மா, டவலை கண்ணு மேல போட்டு 'கொர்' விட துவங்க, நான் கோவை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டை திறந்து, ஹெல்ப் லைன் டைரக்டரியை பார்த்தேன். மொத்தம் 33 ஹெல்ப் லைன் எண்கள். சரி...அடிச்சா எடுக்குறாங்களா...உதவி பண்ணுவாங்களான்னு பார்ப்போம் என்று ஒவ்வொரு நம்பரா அடிச்சேன். பயங்கர ஷாக்! ரயில்வே விசாரணை எண் -131; பிஎஸ்என்எல் புகார் எண் 197; தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் - 85265 65656 ; ரயில்வே முன்பதிவு விசாரணை எண் 1345; எதுவும் வேலை செய்யல; கிசான் கால் சென்டர் நம்பர் 1551; அதுவும் வேலை செய்யல. சீனியர் சிட்டிசன் ஹெல்ப் லைனுக்கு 1253 கால் பண்ணினா, அது சென்னைக்கு போய்ச் சேர்ந்தது. அங்க இருந்து “வேற ஒரு எண்ணுக்கு கால் பண்ணுங்க” என்றனர். அவசர நேரத்துல உதவி கிடைக்கும் என்று நம்பும் இந்த ஹெல்ப் லைன் எண்கள், வெப்சைட்டில் மட்டும்தான் உயிரோடு இருப்பது புரிந்தது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை