கோயிலுக்குள் புகுந்தது வேன்!
பெ.நா.பாளையம்: கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. காலை பூசாரி கோயிலை திறந்து பூஜை செய்தார். சொற்ப அளவே பக்தர்கள் இருந்தனர். அப்போது கோவையிலிருந்து வீரபாண்டி நோக்கி சென்ற ஒரு வேன், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கோயிலின் முன்புறம் இருந்த மண்டபத்தின் இரும்பு குழாய் மீது மோதியது. இதில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.