மேலும் செய்திகள்
ஆதார் பயோமெட்ரிக்கை புதுப்பிக்க அறிவுறுத்தல்
25-Apr-2025
பெ.நா.பாளையம்; மாணவர்களின் ஆதார் கார்டுகளை கோடை விடுமுறையில் புதுப்பிக்க உரிய முயற்சிகளை பெற்றோர் மேற்கொள்ள வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.இது குறித்து, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகையில்,' தமிழகத்தில் படிக்கும் பள்ளியிலேயே ஆதார் பதிவு என்ற திட்டத்தில், 2024--25 கல்வியாண்டில் ஜூன் மாதம் முதல் அனைத்து பள்ளிகளிலும் ஆதார் பதிவு மேற்கொள்ளுதல், 5 முதல், 17 வயது வரை உள்ள மாணவர்களுக்கு கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது படித்து வரும் மாணவர்கள் பயோமெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ளாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த மாணவர்கள் கோடை விடுமுறை நாட்களில் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்கள், தபால் அலுவலகங்கள் மற்றும் வட்டார வள மையங்களில் செயல்பட்டு வரும் சிறப்பு முகாம்களில் ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல்களை மேற்கொள்ள மாணவர்களின் பெற்றோர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தவிர, புதிதாக பள்ளியில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்களும், பள்ளியில் சேரும்போது இந்த பணிகளை நிறைவு செய்து வர வேண்டும். இதனால், வங்கி கணக்குகள் தொடங்குதல், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற பணிகள் கால தாமதம் இன்றி நடைபெறுவதை உறுதி செய்ய இயலும். இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
25-Apr-2025