உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விபத்தில்லா கோவை ரன் அண்ட் வாக் நிகழ்ச்சி

விபத்தில்லா கோவை ரன் அண்ட் வாக் நிகழ்ச்சி

கோவை; விபத்தில்லா கோவை எனும் திட்டத்தை வலியுறுத்தி நடந்த, ஓடலாம் மற்றும் நடக்கலாம்('ரன் அண்ட் வாக்') நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். 'நான் உயிர் காவலன்' எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில், 10 லட்சம் பேரை சாலை பாதுகாப்பு உறுதி மொழி ஏற்க வைக்க, இன்று முதல் ஒரு வார காலத்துக்கு விபத்தில்லா கோவை எனும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ரன் அண்ட் வாக் எனும் நிகழ்ச்சி கோவை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. காலை 5:45 மணிக்கு, 5 கி.மீ., மற்றும், 3 கி.மீ., விழிப்புணர்வு மாரத்தான் துவங்கியது. அதைத் தொடர்ந்து காலை 6:30 மணிக்கு ஒரு கி.மீ., மாரத்தான் மற்றும் நடை நிகழ்வு துவங்கியது. அதிகாலை, மழை பெய்த போதும் அதைப் பொருட்படுத்தாமல், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள், போலீசார், என்.சி.சி., மாணவர்கள், தொழில்துறையினர் என, 1,000-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். முன்னதாக விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் பவன்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்து, 5 கி.மீ. ஓட்டத்தில் பங்கேற்றனர். கலெக்டர் பவன்குமார் பேசுகையில், ''சாலை விதிகளை முறையாக பின்பற்றினால் மட்டுமே விபத்தில்லா கோவை சாத்தியமாகும். அனைவரும் ஒன்றிணைந்து விபத்தில்லா கோவையை சாத்தியமாக்குவோம்,'' என்றார். 'ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3206 ன் மாவட்ட ஆளுநர் செல்லா ராகவேந்தர், உயிர் அறக்கட்டளையின் அறங்காவலர் பாலசுந்தரம், கோவை மாவட்ட அத்தலட்டிக் சங்கத்தின் தலைவர் ஸ்ரீனிவாசன், கோவை என்.சி.சி., குழும தலைமையகத்தின் லெப்டினென்ட் கர்னல் தீபக் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை