உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தயாரிப்பு, காலாவதி தேதி தேவை இல்லை என்றால் நடவடிக்கை

தயாரிப்பு, காலாவதி தேதி தேவை இல்லை என்றால் நடவடிக்கை

கோவை : தீபாவளிக்கு தயாரிக்கப்படும், உணவுப் பொருட்களில் உரிய விபரங்களின்றி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, உணவுப்பாதுகாப்பு துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, இனிப்பு மற்றும் காரம் விற்பனை சூடுபிடித்துள்ளது. இனிப்பகங்கள் தவிர, திடீர் இனிப்பு தயாரிப்பு நிறுவனங்களும், தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. நாளை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்குவதற்காக, இனிப்பு வாங்கி வருகின்றனர்.இதைப்பயன்படுத்திக் கொள்ளும் ஒரு சில நிறுவனங்கள் தயாரிப்பு, காலாவதி தேதி இன்றி இனிப்புகள், காரங்களை விற்பனை செய்கின்றன. வெறும் அட்டை டப்பாக்களிலும், காகிதக்கவர்களிலும், உணவுப்பொருட்களை விற்பனை செய்கின்றனர்.மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறுகையில், ''அனைத்து உணவுப்பொருட்களிலும், தயாரிப்பு, காலாவதி, மூலப்பொருட்கள் குறித்த விபரங்கள் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். தயாரிப்பு, காலாவதி தேதி இல்லாதது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. உணவுப் பொருட்களில் உரிய விபரங்கள் இன்றி, விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை