உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குவாரியை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை

குவாரியை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை

கோவை; அனுமதி ரத்து செய்யப்பட்ட கல்குவாரிகளை, மாற்று பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது என்று கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கோவை மாவட்டத்தில், 136 கல் குவாரிகள் உள்ளன. இவை கனிமவளத்துறை மூலம் ஆய்வு செய்யப்பட்டு, செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, சில குவாரிகளின் அனுமதியை மாவட்ட நிர்வாகமும் கனிமவளத்துறையும், வருவாய்த்துறையும் இணைந்து ரத்து செய்துள்ளது. ரத்து செய்யப்பட்ட கல் குவாரிகளிலிருந்து, கற்களை வெட்டி எடுக்கும் பணிகளை கைவிட்டு வேறு பணிகளுக்கு பயன்படுத்த கூடாது. குவாரிகளை சுற்றி இரும்பு கம்பி வேலி அமைத்து பாதுகாக்கப்பட வேண்டும்.மீறும் நிலத்தின் உரிமையாளர் மற்றும் குவாரி செயல்படுவதற்கான அனுமதி பெற்ற இருவர் மீதும், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கோவை கலெக்டர் எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ