உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  நேரு கல்லுாரியில் ஏ.எம்.இ., படிப்புக்கு கூடுதல் பாடப்பிரிவு

 நேரு கல்லுாரியில் ஏ.எம்.இ., படிப்புக்கு கூடுதல் பாடப்பிரிவு

கோவை: சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனர் ஆணையம், இந்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஏ.எம்.இ., படிப்புக்கு, கோவையில் உள்ள நேரு காலேஜ் ஆப் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் அப்ளைடு சயின்ஸ் கல்லுாரிக்கு, மேலும் ஒரு கூடுதல் பாடப் பிரிவுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விமான பராமரிப்பு துறையில் அதிகரித்து வரும், தேவை மற்றும் கல்வியின் வசதிகள் மற்றும் கல்லுாரியின் தரத்தை கருத்தில் கொண்டு, ஏ.எம்.இ., எனப்படும் ஏர்கிராப்ட் மெயின்டனென்ஸ் இன்ஜினியரிங் படிப்புக்கு, கூடுதல் பாடப் பிரிவுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நேரு கல்லுாரி மாணவர்களுக்கு செய்முறை பயிற்சிகளை, திருவனந்தபுரம் மற்றும் கொச்சி ஆகிய, பன்னாட்டு விமான நிலையத்தில் தரமாக அளிக்கப்பட்டு வருகிறது. கல்லுாரி வளாகத்திலும் செய்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பாடநெறி, 1987 முதல் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. படிப்பின் இறு தியில், மாணவர்களுக்கு அழகப்பா பல்கலை மூலம் விமானவியல் பராமரிப்பு துறையில் இளங்கலை பட்டமும் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை