உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அத்தியாவசிய பணிகளுக்கு கூடுதல் நிதி; தலைவர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

அத்தியாவசிய பணிகளுக்கு கூடுதல் நிதி; தலைவர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

கிணத்துக்கடவு ; கிணத்துக்கடவு ஒன்றிய, ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கூடுதல் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.கிணத்துக்கடவு ஒன்றியத்தில், ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் ரத்தினசாமி மற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மாவட்ட கூடுதல் கலெக்டர் சுவேதா சுமனிடம், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:நிதி பற்றாக்குறை உள்ள கிராம ஊராட்சிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட அளவில் ஊராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடத்தி, ஊராட்சியின் குறைகளை தீர்க்க வழி வகை செய்ய வேண்டும்.ஆதிதிராவிடர் பகுதிகளில் ஹெச்.எஸ்.டி., பட்டா வழங்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 15வது நிதிக்குழு மானியத்தில் உள்ள மீதி தொகைக்கு விரைவில் பணி உத்தரவு வழங்க வேண்டும். கனிமம் மற்றும் சுரங்க நிதியில் முடித்த பணிகளுக்கு விரைவில் நிதி விடுவிக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது:ஊராட்சிகளில் பணிகள் மேற்கொள்ள, சென்னை வரை அனுமதி பெற வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், ஊராட்சி பணிகள் தாமதம் அடைய வாய்ப்புள்ளது.வீட்டு வரி வசூலிக்க 'ஆன்லைன்' வசதி உள்ளது. ஆனால், அடிக்கடி 'சர்வர்' கோளாறு ஏற்படுவதால் வரி செலுத்த சிரமம் ஏற்படுகிறது. இது போன்று பல பிரச்னைகள் ஊராட்சிகளில் உள்ளது. இதை மாவட்ட நிர்வாகம் கவனித்து விரைவில் சரி செய்ய வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை