உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஈரோட்டில் ஆதியோகி ரத யாத்திரை இன்று முதல் நடைபெறுகிறது

மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஈரோட்டில் ஆதியோகி ரத யாத்திரை இன்று முதல் நடைபெறுகிறது

தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு, தென் கைலாய பக்தி பேரவை சார்பில், ஈரோட்டில் இன்று (ஜன., 14) முதல், ஆதியோகி ரத யாத்திரை நடைபெற உள்ளது.கோவை ஈஷா யோகா மையத்தில், 31வது மஹா சிவராத்திரி விழா, வரும் பிப்., 26ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க, பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து நேரில் ஆதியோகியை தரிசிக்க முடியாதவர்கள், அவர்கள் ஊரிலேயே தரிசனம் செய்வதற்காகவும், இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.இந்த ரத யாத்திரை, கோவை ஈஷா யோகா மையத்திலிருந்து, தமிழகத்தின் நான்கு திசைகளுக்கும் சென்றுள்ளது. ரத யாத்திரைக்காக, 6 அடி உயர ஆதியோகி திருவுருவ சிலையுடன் கூடிய நான்கு வாகனங்கள், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.இந்த வாகனங்களில் ஒன்று, இன்று முதல் 16ம் தேதி வரை, ஈரோட்டில், பெரிய மாரியம்மன் கோவில், ஒயாசிஸ் ரெஸ்டாரன்ட், ஈஷா நர்சரி மற்றும் கணபதிபாளையம் உள்ளிட்ட இடங்களில் வலம் வர உள்ளது. கொடுமுடி, பெருந்துறை, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், அந்தியூர் ஆகிய இடங்களிலும், இந்த ரதம் பயணிக்கவுள்ளது.இந்த ரதங்கள், வரும் பிப்.,26ம் தேதி மஹாசிவராத்திரி அன்று, கோவை ஈஷா யோகா மையத்தை வந்தடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி