உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் கூட்டுறவு சங்கங்கள் வரும் 7 முதல் வேலை நிறுத்தம்

வேளாண் கூட்டுறவு சங்கங்கள் வரும் 7 முதல் வேலை நிறுத்தம்

அன்னுார்: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் ஆனந்தன், பொருளாளர் முத்துக்குமார் ஆகியோரது அறிக்கை: கூட்டுறவு சங்கங்களை வகைப்பாடு செய்யாமல், அனைத்து சங்க பணியாளர்களுக்கும் 2023 மார்ச் மாதம் பெற்ற சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு விரைவில் நிதிப்பயன் வழங்க வேண்டும். ஆயிரம் ரூபாய் பென்ஷனை 5,000 ஆக உயர்த்த வேண்டும். சங்கங்களுக்கு அரசு தர வேண்டிய, ஏழு சதவீத வட்டி பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளதை உடனே வழங்க வேண்டும். பதவி உயர்வில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் வகையில், மாவட்ட அளவில் பணி மூப்பு பட்டியல் தயார் செய்து, பதவி உயர்வு வழங்க வேண்டும். ரேஷன் கடை பணியாளர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 25 அம்ச கோரிக்கைகளை பலமுறை வலியுறுத்தியும், அரசு கண்டுகொள்ளவில்லை. நாளை (6ம் தேதி) காலை 11 மணிக்கு, கோவை மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகம் முன், மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். நாளை மறுதினம் (7ம் தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை