உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சோலார் மின் நிறுவனத்துடன் வேளாண் பல்கலை ஒப்பந்தம்

சோலார் மின் நிறுவனத்துடன் வேளாண் பல்கலை ஒப்பந்தம்

கோவை; கோவை, வேளாண் பல்கலையின், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் 'சுவலக்ட்' சோலார் மின்உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனம் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது. சோலார் மின் தகடுகள், சோலார் மின் கட்டுப்பாட்டுக் கருவிகள், சோலார் மின் நிலையங்கள் அமைப்பதற்கான கட்டமைப்பு, மின் நிலைப்படுத்திகள் உள்ளிட்டவை தயாரிப்பில் இந்நிறுவனம் முன்னணியில் உள்ளது.துணைவேந்தர் கீதாலட்சுமி, பதிவாளர் தமிழ்வேந்தன், டீன் ரவிராஜ், சுவலக்ட் இயக்குநர் நாராயணன் ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையொப்பமானது.இதன்வாயிலாக, இளங்கலை மற்றும் முதுநிலை மாணவர்கள் தொழிற்சாலை பயிற்சிகளுக்கும், வேலைவாய்ப்புக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வேளாண் துறையில், அதிக திறன்கொண்ட சோலார் மின்தகடுகளைப் பயன்படுத்தி, மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் வழிவகுக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ