அ....ஆ... கற்பிக்குமிடங்கள் இனி ப இனி ஒரு வாய் பேச, பல காதுகள் கேட்கும்
கோவை: கேரள மாநில பள்ளி வகுப்பறைகளில் பின்பற்றப்படுவதைப் போன்ற, 'ப' வடிவ வகுப்பறைகள் தமிழக பள்ளிகளிலும் அமைக்கப்படவுள்ளன. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.மாணவர்களுக்கு இடையே வேறுபாடுகளை தவிர்க்கும் நோக்கில், அரை வட்ட வடிவில் இருக்கை அமைப்பை பின்பற்றும் நடைமுறை, கேரளாவில் சில பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, 'முதல் வரிசையில் நன்கு படிக்கும் மாணவர்கள், கடைசி வரிசையில் படிப்பில் பின்தங்கிய மாணவர்கள்' என்ற, பழைய நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. கேரளாவை பின்பற்றி, தற்போது தமிழக வகுப்பறைகளையும், 'ப' வடிவ வகுப்பறைகளாக மாற்ற, தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இது குறித்து, கல்வியாளர் லெனின் பாரதி கூறியதாவது:1994ம் ஆண்டு, மத்திய அரசின் கல்விக்குழு ஆரம்ப கல்வி திட்டத்தின் கீழ், மாணவர்களின் இருக்கை முறை மாற்றத்தை அமல்படுத்த அறிவுறுத்தியது.அதன்படி, ஒருசில மாநிலங்களில் ஆரம்பப்பள்ளிகளில் நடைமுறையை அமல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அரை வட்ட வடிவில் மாணவர்கள் அமரும்போது, அவர்களின் சமூக மற்றும் உணர்வுப்பூர்வ வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும்.மாணவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும், மதிக்கவும், ஒன்றிணைந்து செயல்படவும் இந்த அமைப்பு உதவுகிறது. ஒரு வாய் பேச, பல காதுகள் கேட்கும் வகுப்பறைகள், கலந்துரையாடல் மையமாக மாறினால், வகுப்பறையில் ஒரு நேர்மறையான மற்றும் ஆதரவான சூழல் உருவாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.1994ம் ஆண்டு, மத்திய அரசின் கல்விக்குழு ஆரம்ப கல்வி திட்டத்தின் கீழ், மாணவர்களின் இருக்கை முறை மாற்றத்தை அமல்படுத்த அறிவுறுத்தியது. அதன்படி, ஒருசில மாநிலங்களில் ஆரம்பப்பள்ளிகளில் நடைமுறையை அமல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
'கற்றல் திறன் அதிகரிக்கும்'
தமிழ்நாடு உளவியல் சங்கத் தலைவர் பாலமுரளி கூறியதாவது:வரவேற்க வேண்டிய நல்ல மாற்றம். இது நாடாளுமன்ற அமைப்புக்கே ஒத்ததாகும். வட்ட வடிவில் அமர்ந்து விவாதிக்கும்போது, மாணவர்களின் ஆளுமைத் திறன் மேம்படும்; கற்றல் திறன் அதிகரிக்கும். தற்போதுள்ள 'ஆசிரியர் பேசும் - மாணவர்கள் கேட்பது' எனும் நடைமுறை மாறினால், மாணவர்களுக்கு இடையிலான ஒருமைப்பாட்டையும் பரஸ்பரப் புரிதலையும் உருவாக்கும்.தமிழகத்திலுள்ள மாணவர் எண்ணிக்கை, கேரளாவை ஒப்பிடுகையில் அதிகம். இருப்பினும், பள்ளிகளின் உட்கட்டமைப்பு, கல்வி முறை ஆகியன காலநிலைக்கு ஏற்ப, தேவையான மாற்றங்களை ஏற்கும் வகையில் புதிய மாற்றத்தை கச்சிதமாக அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.