உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அ.தி.மு.க., பூத் கமிட்டி கூட்டம்

அ.தி.மு.க., பூத் கமிட்டி கூட்டம்

கோவை, : கோவை, தெற்கு, வடக்கு மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.வரும் சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க., வேகமாக தயாராகி வருகிறது.தொடர்ந்து பூத் கமிட்டிக் கூட்டங்களை நடத்தி, நிர்வாகிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை, முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் மாவட்ட செயலாளர்கள் வழங்கி வருகின்றனர்.கடந்த 2 நாட்களில் கோவை வடக்கு, கோவை தெற்கு மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் தனித்தனியாக, பூத் கமிட்டிக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.முன்னாள் அமைச்சர் வேலுமணி, வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், விடுபட்டவர்களை இணைத்தல், திருத்தம் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதா, ஒவ்வொரு பூத்கமிட்டி உறப்பினரும் 110 வாக்காளர்களைச் சந்தித்து, அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் கூறி ஓட்டு சேகரிக்க வேண்டும் என, ஆலோசனைகளை வழங்கினார்.இக்கூட்டங்களில், எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூனன், ஜெயராம், அருண்குமார், மாநில மாணவரணி செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.பி., ஜெயவர்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ