உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அண்ணாதுரை பிறந்தநாள் அ.தி.மு.க., கொண்டாட்டம்

அண்ணாதுரை பிறந்தநாள் அ.தி.மு.க., கொண்டாட்டம்

கோவை; மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு, அ.தி.மு.க., சார்பில், அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்யப்பட்டது. ஹுசூர் சாலையில் உள்ள அ.தி.மு.க., அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் இருந்து, அவிநாசி சாலைக்கு, கோவை வடக்கு எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் தலைமையில் ஊர்வலமாகச் சென்ற அ.தி.மு.க.,வினர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து, கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணாதுரை படத்துக்கு மலர்துாவி மரியாதை செய்தனர். பின், கட்சிக்கொடி ஏற்றி, இனிப்பு வழங்கினர். சிங்காநல்லுார் எம்.எல்.ஏ., ஜெயராம், அமைப்பு செயலாளர் செ.ம.வேலுசாமி மற்றும் மாவட்ட, கிளைக்கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை