உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இவர் தான் அந்த சார் போஸ்டர் தி.மு.க., மீது அ.தி.மு.க., புகார்

இவர் தான் அந்த சார் போஸ்டர் தி.மு.க., மீது அ.தி.மு.க., புகார்

பொள்ளாச்சி:சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் பலாத்கார வழக்கை கண்டித்து, 'யார் அந்த சார்' என போஸ்டர் ஒட்டி, அ.தி.மு.க.,வினர் பரபரப்பு ஏற்படுத்தினர்.இதற்கு பதிலடி தரும் வகையில், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் நடந்த கோடநாடு கொலை மற்றும் கொள்ளை, 2018ல் நடந்த பாலியல் சீண்டல், 2019ல் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் படங்களுடன், 'இவர் தான் அந்த சார்' என, தி.மு.க.,வினர் பொள்ளாச்சியில் போஸ்டர் ஒட்டினர்.இந்நிலையில், பொள்ளாச்சி நகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா மற்றும் நிர்வாகிகள், கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ரத்னகுமாரிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் மணிமாறன், பொள்ளாச்சி நகரமெங்கும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பெயருக்கும், கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்தி உள்ளார்.நீதிமன்றங்களில் விசாரணை நடந்து வரும் வழக்குகளை திசை திருப்பும் வகையில், சுவரொட்டிகளில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களிலும் இந்த பதிவுகளை வெளியிட்டுள்ளார்.இச்செயலில் ஈடுபட்ட தி.மு.க., நிர்வாகி, சுவரொட்டி அச்சிட்ட பதிப்பக பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களில் உள்ள பதிவுகளை நீக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி