அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமி செட்டிபாளையத்தில் எம்.ஜி.ஆரின்., 108 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நகர செயலாளர் குருந்தாசலம் தலைமை வகித்தார். மாணவர் அணி செயலாளர் பிரேம்குமார் வரவேற்று பேசினார். கோவை வடக்கு மாவட்ட செயலாளர் அருண்குமார் எம்.எல்.ஏ., அமைப்பு செயலாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., சின்னராஜ், தலைமை கழக பேச்சாளர் முகவை கண்ணன் உள்ளிட்டோர் பேசினர்.விழாவில், 800 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.