இ.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்
கோவை: திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விஷயத்தில், இந்து விரோத போக்கை கடைபிடித்த தமிழக அரசை கண்டித்து, சத்தியாகிரக அறப்போராட்ட ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்தது. அதன் மாநில பொது செயலாளர் சூர்யா தலைமை வகித்தார். திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை நிறைவேற்ற விடாமல் தடுத்தது. தமிழக த.வெ.க. அரசு தொடர்ந்து இந்து விரோத போக்கை கடைபிடிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. திரளான இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.