உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மது, புகையிலை விற்றவர்கள் கைது

மது, புகையிலை விற்றவர்கள் கைது

நெகமம் : நெகமம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக மது மற்றும் புகையிலை பொருட்கள் விற்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.நெகமம் சுற்றுவட்டார பகுதியில், சட்ட விரோத மது மற்றும் புகையிலை விற்பனையை கண்காணிக்க, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது காட்டம்பட்டி டாஸ்மாக் கடை அருகே, காலை நேரத்தில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து கொண்டு இருந்த, புதுக்கோட்டையை சேர்ந்த கோட்டைசாமி, 27, என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 17 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.நெகமம் அடுத்த கரப்பாடி பிரிவில் உள்ள பெட்டிக்கடையில், தேவகோட்டையைச்சேர்ந்த சுப்பையன், 65, என்பவர் புகையிலை விற்பனை செய்து கொண்டு இருந்தார். அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 13 புகையிலை பொருள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை