உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  முன்னாள் மாணவர்கள் துபாயில் சந்திப்பு

 முன்னாள் மாணவர்கள் துபாயில் சந்திப்பு

கோவை: நவஇந்தியா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின், துபாய் கிளை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, துபாய் நாட்டில் டெய்ரா நகரில் உள்ள கிரவுன் பிளாஸா ஹோட்டலில் நடந்தது. கல்லுாரியின் முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். விழாவில், கல்லுாரியின் தகவல் ஏடு வெளியிடப்பட்டது. விழாவில் பங்கேற்ற, நுாற்றுக்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், தங்கள் கல்லுாரி நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர். தற்போதைய மாணவர்களுக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். முன்னாள் மாணவர் சங்க துபாய் கிளைத் தலைவர் அனீஷ் கோபாலன், தலைமைக் கிளைத் தலைவர் செந்தில்குமார், சங்கச் செயலர் சந்தானகிருஷ் ணன், செயற்குழு உறுப்பினர் பிரகதீஸ்வரன், முன்னாள் மாணவரும், துபாய் சமையல் கலை நிபுணருமான ஆனந்த் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை