மேலும் செய்திகள்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு..
31-Dec-2024
அன்னுார்; அன்னுார் அரசு மேல்நிலைப்பள்ளி 70 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1998 முதல் 2000ம் ஆண்டு வரை கலைப் பிரிவில் படித்த மாணவர்கள் பள்ளிக்கு உதவ முடிவு செய்தனர்.இதையடுத்து பள்ளியில் 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நுழைவு வாயில் அமைத்தனர். இதன் திறப்புவிழா நடந்தது.இதை பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி கார்த்திகேயன் திறந்து வைத்தார். 25 ஆண்டுகளுக்கு முன் தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்து, நினைவு பரிசு வழங்கி, ஆசிபெற்றனர்.முன்னாள் மாணவர்கள் கடந்த 25 ஆண்டுகளில் சாதித்தவைகளை தெரிவித்தனர்.பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருளாளர் நாராயணசாமி, தலைமை ஆசிரியர் சிவசக்தி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். முன்னாள் மாணவர்களின் குழந்தைகள் கலை நிகழ்ச்சி நடந்தது.
31-Dec-2024