மேலும் செய்திகள்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
03-Jan-2025
மேட்டுப்பாளையம் : நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சாம்ராஜ் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் 2000ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள், 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்தித்துக் கொண்டனர்.மேட்டுப்பாளையம் கல்லாறு அருகே உள்ள தனியார் விடுதியில் இதற்கான நிகழ்ச்சி நடந்தது. இதில், அப்பள்ளியில் அப்போது பணியாற்றிய ஜெகநாதன், போஸ், பிரேமா மற்றும் கருணாகரன் ஆகிய ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். மேளதாளம் முழங்க ஆசிரியர்களை, முன்னாள் மாணவர்கள் அழைத்து வந்தனர். பின் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று ஆடல், பாடல் போன்று கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் பழைய நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்.
03-Jan-2025