உதவித்தொகை வழங்கிய முன்னாள் மாணவர்கள்
வால்பாறை; பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, முன்னாள் மாணவர்கள் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.வால்பாறை அடுத்துள்ள, சோலையாறு அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில், தலைமை ஆசிரியர் தமிழ்செல்வன் தலைமையில் பரிசளிப்பு விழா நடந்தது. முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் ராஜ்கோபி வரவேற்றார்.விழாவில், மாணவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை எப்படி பெறுவது என்பது குறித்து சட்ட ஆலோசகர் மகேஷ்வரன் பேசினார்.முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கமலக்கண்ணன், வசந்தகுமார் (ஆசிரியர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டி, பரிசு மற்றும் உதவித்தொகை வழங்கினர். முன்னாள், இந்நாள் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.