உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அபாய நிலையில் அங்கன்வாடி கட்டடம்

அபாய நிலையில் அங்கன்வாடி கட்டடம்

பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையம் பழையூரில் உள்ள அங்கன்வாடி மையம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பழைய ஊரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. பழமையான இம்மையம் எப்போது வேண்டுமானாலும், இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது. இம்மையத்தை சுற்றியும் புதர்கள் மற்றும் சாக்கடை கால்வாய் செல்வதால், பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இம்மையத்தில் இடவசதியும்,போதுமான அளவு காற்றோட்ட வசதியும் இல்லாததால், குழந்தைகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது.இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில்,' உள்ளாட்சி நிர்வாகத்துக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் பலமுறை தகவல் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ள இம்மையத்தில் தங்கள் குழந்தைகளை பெற்றோர் அச்சத்துடன் விட்டுச் செல்லும் பரிதாபம் உள்ளது. போதுமான அடிப்படை வசதிகளும் இங்கு இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அங்கன்வாடி மையத்தை உடனடியாக இடித்து அகற்றிவிட்டு, அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய அங்கன்வாடி மையத்தை அரசு உடனடியாக கட்டி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ