உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அண்ணா பல்கலை வாலிபால் போட்டி; ஜி.சி.டி., அணி வீரர்கள் அபார வெற்றி

அண்ணா பல்கலை வாலிபால் போட்டி; ஜி.சி.டி., அணி வீரர்கள் அபார வெற்றி

கோவை : பி.பி.ஜி., கல்லுாரியில் நடக்கும் ஆண்களுக்கான வாலிபால் போட்டியில், அரசு தொழில்நுட்ப கல்லுாரி அணி அபார வெற்றி பெற்றது.அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான(11வது மண்டலம்) விளையாட்டு போட்டி, கடந்த, 20ம் தேதி முதல் பல்வேறு கல்லுாரி மைதானங்களில் நடந்துவருகிறது. பி.பி.ஜி., கல்வி நிறுவனத்தில் நேற்றும், இன்றும் ஆண்களுக்கு நடக்கும் வாலிபால் போட்டியில், 17 அணிகள் பங்கேற்றுள்ளன.நேற்றைய முதல் போட்டியில், எஸ்.என்.எஸ்., இன்ஜி., கல்லுாரி அணியும், ஆதித்யா தொழில்நுட்ப கல்லுாரி அணியும் மோதியது. இதில், 25-12, 25-23 என்ற புள்ளி கணக்கில் எஸ்.என்.எஸ்., இன்ஜி., கல்லுாரி அணி வெற்றி பெற்றது.தொடர்ந்து, குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணியும், கிரைஸ்ட் தி கிங் இன்ஜி., கல்லுாரி அணியும் மோத, 25-13, 20-25, 25-21 என்ற புள்ளி கணக்கில் குமரகுரு கல்லுாரி அணி வெற்றி பெற்றது. கே.ஜி.ஐ.எஸ்.எல்., அணி, 25-10, 25-20 என்ற புள்ளி கணக்கில் ஏசியன் கல்லுாரி அணியை வென்றது.பி.பி.ஜி., ஐ.டி., கல்லுாரியும், கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரி(ஜி.சி.டி.,) அணியும் மோதின. திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய அரசுக் கல்லுாரி அணியினர், 25-10, 25-23 என்ற புள்ளி கணக்கில் பி.பி.ஜி., ஐ.டி., கல்லுாரி அணியை வென்றனர்.அண்ணா பல்கலை மண்டல மைய அணியினர், 19-25, 25-16, 25-19 என்ற புள்ளி கணக்கில் சி.எஸ்.ஐ., கல்லுாரி அணியையும், ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜி, மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணி, 25-11, 25-12 என்ற புள்ளி கணக்கில், இன்போ கல்லுாரி அணியையும் வென்றது. தொடர்ந்து, போட்டிகள் நடந்துவருகின்றன.முன்னதாக, பி.பி.ஜி., கல்வி குழும நிறுவனங்களின் துணை தலைவர் அக் ஷய், தாளாளர் சாந்தி ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி