உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில்களில் நாளை அன்னாபிேஷக பூஜை

கோவில்களில் நாளை அன்னாபிேஷக பூஜை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, சிங்காநல்லுார் சித்தாண்டீஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, அன்னாபி ேஷக பூஜை நாளை நடக்கிறது. காலை, 10:00 மணி முதல், 11:30 மணி வரை சுவாமி அன்னாபி ேஷக அலங்காரத்திலும், 11:30 மணிக்கு அன்னா பிேஷக அலங்காரம் கலைக்கப்பட்டு, 12:00 மணிக்கு மஹா அபிேஷகமும் நடக்கிறது. மதியம், 12:30 மணிக்கு அலங்கார பூஜை, 1:00 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. அதை தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. பூஜைக்கு தேவையான பொருட்கள் அல்லது நிதியை இன்று மதியத்துக்குள் வழங்கலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். *ஆனைமலை சோமேஸ்வரர் கோவிலில், அன்னாபிேஷக விழா நாளை மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. மஹா அபிேஷகம், அன்னாபிேஷகம், ஆராதனை நடக்கிறது. * தேவம்பாடிவலசு கங்கா, பார்வதி உடனமர் அம்மணீஸ்வரர் கோவிலில், அன்னாபி ேஷக விழாவையொட்டி, காலை, 7:00 மணி முதல் 10:00 மணி வரை ருத்ர ேஹாமம், 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம், மதியம், 2:00 மணி முதல், 4:00 மணி வரை அம்மணீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷக பூஜை நடக்கிறது.மாலை, 4:00 மணி முதல், 5:00 மணி வரை அன்னாபிேஷக அலங்காரம், மஹா தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை