உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்

சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்

கோவை: கோவை சுற்றுவட்டாரங்களில் உள்ள சிவன் கோயில்களில் நடந்த அன்னாபிஷேக விழாவில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். ஆண்டுக்கு ஒருமுறை சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம், ஐப்பசி மாத பவுர்ணமி அன்று நடத்தப்படும். கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில், ராம்நகர் கோதண்டராமர் சுவாமி கோயிலில் அமைந்துள்ள, ஸ்ரீ ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரர், ராம்நகர் வி.என்.தோட்டம் மங்களாம்பிக சமேத ஆதி கும்பேஸ்வரர், கே.கே.புதுார், பிரசன்ன விநாயகர் கோயிலில் அமைந்துள்ள சிவலிங்கம், பேரூர் பட்டீஸ்வரர், மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர், மதுக்கரை ஏ.சி.சி. காலனி ஸ்ரீ லக்ஷ்மி நாராயணா உட்பட பல சிவன் கோயில்களில், அன்னாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். * பேரூர் பட்டீஸ்வரர் கோயில் மற்றும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில்களில், அன்னாபிஷேகம் நடந்தது. பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில், நேற்று மாலை 4:00 மணிக்கு, பட்டீஸ்வரருக்கு சாயரட்ச அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 25 கிலோ சாதம் மற்றும் காய்கறி கொண்டு, பட்டீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. மாலை, 5:30 மணிக்கு, மஹாதீபாராதனை நடந்தது. அதேபோல, பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில், 50 கிலோ சாதம் கொண்டு, வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு, அன்னாபிஷேகம் நடந்தது. அதேபோல, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை, தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி