அன்னதான அறக்கட்டளை அலுவலகம் திறப்பு
கோவை : கோவை அன்னதான அறக்கட்டளையின் புதிய தலைமை அலுவலகம் திறப்பு விழா, சித்தாபுதுார் ரோட்டில் நடந்தது. பல்லடம் வனம் இந்தியா பவுண்டேஷன் தலைவர் சின்னசாமி திறந்து வைத்தார். அறக்கட்டளை இணை செயலாளர் உதயகுமார் கூறுகையில், ''ஆறு ஆண்டுகளாக அன்னதான சேவை செய்கிறோம். மாதத்தில் 10 நாட்கள், 250 பேருக்கு காலை உணவு வழங்குகிறோம். அலுவலகம் திறப்பு விழாவை முன்னிட்டு, ஆனைகட்டியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் ஆறு குழந்தைகளுக்கு கல்வி செலவுக்காக ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்க இருக்கிறோம். மருத்துவ உதவியும் வழங்கப்படுகிறது,'' என்றார்.