உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மரத்தினுள் மறைந்த வழிகாட்டி அறிவிப்பு

மரத்தினுள் மறைந்த வழிகாட்டி அறிவிப்பு

கிணத்துக்கடவு; வடசித்தூர் ரவுண்டானா அருகே நெடுஞ்சாலை சார்பில் அமைக்கப்பட்ட அறிவிப்பு பலகையை மரக்கிளை சூழ்ந்துள்ளது. கிணத்துக்கடவு, வடசித்தூர் ரவுண்டானா வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. இவ்வழியாக, மெட்டுவாவி, காட்டம்பட்டி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரவுண்டானா அருகே, ரோட்டோரம் நெடுஞ்சாலை துறை சார்பில் வழித்தட அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. மரம் அருகே இந்த அறிவிப்பு அமைக்கப்பட்டது. ஆனால், மரக்கிளை நெடுஞ்சாலை அறிவிப்பை முழுவதும் மறைத்துள்ளது. இதனால் புதிதாக வரும் வாகன ஓட்டுநர்கள் வழி தெரியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, வழித்தட அறிவிப்பை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை