உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளிகளில் ஆண்டு விழா

அரசு பள்ளிகளில் ஆண்டு விழா

- நிருபர் குழு-நெகமம், மெட்டுவாவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா என, முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. கிணத்துக்கடவு வட்டார கல்வி அலுவலர் எடிசன் பெர்னாட் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் மயிலாத்தாள் வரவேற்றார்.கலைத் திருவிழாவில், வில்லுப்பாட்டு போட்டியில் மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.தொடர்ந்து, மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளான, நடனம், பாட்டு, நாடகம் போன்றவை நடந்தது. இதில், மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உட்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.உடுமலை: குருவப்பநாயக்கனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது. விழாவில் பள்ளி ஆசிரியர் ரங்கராஜன் வரவேற்றார். தலைமையாசிரியர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். ஆண்டுவிழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழுவினர் பரிசுகளை வழங்கினர். மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை